இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

57பார்த்தது
இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஜன., 23) தொடங்குகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்களிக்க இந்த தொகுதியில் மொத்தம் 256 பேர் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 5ஆம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சைகள் என 46 பேர் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி