போதையில் சென்ற தந்தை, மகனால் ஏற்பட்ட விபத்து(வீடியோ)

83பார்த்தது
திருவாரூர்: மன்னார்குடி அருகே போதை ஆசாமிகளால் ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காரிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராகுல், அவரது தந்தை சேனாதிபதி ஆகியோர் மது அருந்திவிட்டு டூவீலரில் மன்னார்குடியில் இருந்து காரிக்கோட்டை நோக்கி சென்றுள்ளனர். டூவீலரை ராகுல் தாறுமாறாக இயக்கியுள்ளார். மேலவாசல் அருகே சென்றபோது ராகுலின் வாகனம் தினேஷ் என்பவரின் டூவீலரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி