உறவினர் வீட்டுக்கு வந்த வடமாநில சிறுவன் பரிதாப சாவு.

83பார்த்தது
உறவினர் வீட்டுக்கு வந்த வடமாநில சிறுவன் பரிதாப சாவு.
பெருந்துறை அருகே, உறவினர் வீட்டுக்கு வந்த ஜார்க்கண்ட மாநில சிறுவன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்ரோ ஓரன். இவரது மகன் முகேஷ் ஓரன் (15). இவர் 8- ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்து வந்தார். இச்சிறுவன் பெருந்துறையை அடுத்த பொன்முடி பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு கடந்த 20- ஆம் தேதி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து முகேஷ் ஓரனுக்கு கடந்த 23- ஆம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பெருந்துறையை அடுத்த சரளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி