மொடக்குறிச்சி - Modakurichi

மாநகராட்சி ஊராட்சி யில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆய்வு

மாநகராட்சி ஊராட்சி யில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலாரில் ரூ. 63.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும், ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4 பகுதியில் மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் வார்டு எண் 53, ரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியில் மேற்குப் பக்க கட்டிடத்தின் முதல் தளத்தில் ரூ. 60.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வார்டு எண். 56 ரங்கம்பாளையம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும், வைராபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 200.07 கோடி மதிப்பீட்டில் பெரும்பள்ளம் ஓடை தூர்வாரிப் பக்க சுவர்கள் பலப்படுத்தப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా