மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் மனோஜ் தாக்கூர் (26) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், மனோஜை உயிருடன் கடைசியில் பார்த்த அவரது மருமகன் தரம் தாக்கூர் (19) என்ற நபரை போலீசார்பிடித்துள்ளனர். அப்போது நடந்த விசாரணையில், தரம்-ஐ ஈக்கள் மொய்த்துக்கொண்டே இருந்துள்ளது. அவரின் ஆடை மற்றும் மார்பில் ரத்தக்கறை இருக்க சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, குடிபோதையில் நடந்த சண்டையின் போது, கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.