மொடக்குறிச்சி - Modakurichi

ஈரோட்டில் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ்

ஈரோட்டில் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ்

ஈரோடு மாநகராட்சியில் வீட்டு வரிகளை வரையறை செய்வது குறித்து, வீடுகள் தோறும் கண்காணித்து மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சிக்கு வரியினங்கள் என்பது பிரதான வருவாயாக உள்ளது. இந்த வருவாய் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வரும் நிதியாண்டில் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்கள்மூலம் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. அப்போது, வீடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா, வீட்டின் மீது மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஊழியர்கள் கண்காணித்து கணக்கெடுத்து வருகின்றனர். மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட வீட்டிற்கு வரி எவ்வளவு என்பது குறித்து, வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வரப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள, 4 மண்டலங்களில் இருந்தும், தலா 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా