ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 3 மாடிகள் கொண்ட அப்துல் கனி ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 340 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், வணிக வளாகத்தை சுற்றி சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிக வளாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வணிக வளாகத்தை சுற்றி உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும், வணிக வளாகத்திற்குள் குடிநீர் வசதி மற்றும் ஏடிஎம் வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாகவும் , தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் வருகிற ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபாடு உள்ளதாகும் தெரிவித்தனர்.