ஈரோடு வடக்கு , தெற்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்

67பார்த்தது
ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் சு. முத்துசாமி தலைமை வகித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் முத்துசாமி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரும் 19ம் தேதி ஈரோடு வருகை தர உள்ளார். அப்போது அவர் திமுக கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

 அதை தொடர்ந்து, மறுநாள் 20ம் தேதி சோலாரில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது" என தெரிவித்தார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆத்வ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "திமுக இயக்கத்தின் மீதும், திமுக தலைவர் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். இந்நிலையில், அவரை தவிர அக்கட்சியில் உள்ளவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை" என்று பதிலளித்தார் அமைச்சர் முத்துசாமி.

 மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து திமுகவை எச்சரித்து பேசுவது என்பது விஜய்க்கு திமுக மீது உள்ள பயத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி