கேரளாவின் திருச்சூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 46 வயது நபருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து சாவக்காடு விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடபுரத்தைச் சேர்ந்த ஹைதரலி (46) என்பவரை குற்றவாளி என நீதிபதி அனியாஸ் தயில் அறிவித்தார். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2021 டிசம்பரில் நடந்தது. மாணவி குற்றவாளியின் வீட்டிற்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ வழக்கில் கைதான ஹைதரலி சிறையில் உள்ளார்.