வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.