தாளவாடியில் கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

67பார்த்தது
தாளவாடியில் கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலிருந்து
கிரானைட் கல் அறுக்கும் ஆலைக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்களை எடுத்து வந்த டாரஸ் லாரி ஒன்று சூசையபுரம் யூனியன் வங்கி அருகில் பழுதாகி நின்றுள்ளது. தாளவாடி காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு தாளவாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர், முருகேசன் சென்று விசாரித்தபோது, உரிமம் பெறாமல் கிரானைட் கற்களை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், சித்துராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஓட்டுநர் ருமான்(27) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி