கோபி - Gobichettipalayam

ஈரோட்டில் பூண்டு விலை அதிரடி உயர்வு கிலோ ரூ. 420 க்கு விற்பனை

ஈரோட்டில் பூண்டு விலை அதிரடி உயர்வு கிலோ ரூ. 420 க்கு விற்பனை

சமையலில் மிகவும் இன்றி அமையாததாக பூண்டுள்ளது. பூண்டு நாட்டு பூண்டு, மலை பூண்டு என இரண்டு வகைகளாக உள்ளது. மலைப்பூண்டு இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டுப்பூண்டு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜனவரி பிப்ரவரி மாதம் சாகுபடிக்கு தயாராகி டிசம்பர் மாதம் அறுவடை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சீசன் காலத்தில் 150 டன் முதல் 200 டன் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது வெறும் 50 டன் மட்டுமே பூண்டுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் எதிரொலியாக பூண்டுகள் விலை கடந்த வாரத்தை விட அதிரடியாக உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு சிறிய வகை கிலோவில் ரூ. 320 முதல் விற்கப்படுகிறது. பெரிய ரகம் ரூ. 380 விற்கப்படுகிறது. நாட்டுப்பூண்டு சிறிய ரகம் ரூ. 300க்கு விற்கப்படுகிறது. பெரிய ரகம் ரூ. 360 முதல் ரூ. 420 வரை விற்கப்படுகிறது. பூண்டின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது, தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கூண்டுகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக தான் விலையும் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து விலையும் குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా