சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

57பார்த்தது
சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்தனர் தாளவாடி வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பெண்கள் ஒரு மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது: தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டாக்டர்கள் நியமிக்க வேண்டும். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளை பெருந்துறை அல்லது கோவைக்கு அனுப்பி வருகிறார்கள். எனவே சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த வங்கி ஏற்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி