கோபி: 250 மருத்துவர்கள் போராட்டம்; சிகிச்சை அளிப்பது நிறுத்தம்

68பார்த்தது
மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியும், சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் 250 மருத்துவர்கள் போராட்டம்
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் உள்ள 100 மருத்துவமனைகளில் பணியாற்றும் 250 மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளை தவிர புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக மாநில பொருளாளர் டாக்டர். கவுரிசங்கர் கூறும் போது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 2008 ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பிணையில் வரமுடியாத பிரிவில், சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அதே போன்று மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதுடன், மாநில அளவில் உயர்நிலை குழு அமைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடைபெறும் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மருத்துவமனையில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி