கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்ன காளியியூர் பகுதியில் பங்களா புதூர் போலீஸர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக கவுந்தப்பாடி சலங்கப்பாளையம் இரட்டைவாய்க்காலை சேர்ந்த ஆறுமுகம், கணக்கம்பாளையம் பாரதி வீதியைச் சேர்ந்த கோபாலன், நேரு நகர் வீதியை சேர்ந்த பாலுசாமி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.