கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

84பார்த்தது
கோபிசெட்டிபாளையத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி. என். பாளையம் அருகே புஞ்சை துரையம்பாளையத்தில் உள்ள கல்குவாரியி கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குவாரி முறையான உரிமம் பெறாமல் செயல்பட்டது தெரியவந்து. இந்த விவகாரத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் விநியோக திட்ட வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் பொறுப்பு கூடுதலாக கவனித்து வந்த இந்த நிலையில் ஈரோட்டில் சமூக நலப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்த இரா. சரவணன் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று(செப்.16) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி