கிணற்றினுல் சிக்கிகொண்ட பூனையை மீட்டவருக்கு பாரட்டுகள்

3276பார்த்தது
கோபிசெட்டிபாளையம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றினுல் சிக்கிகொண்ட பூனையை கயிறு கட்டி உள்ளே இறங்கி, பூனையை கிணற்றிலிருந்து மீட்டவருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது,

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவர் கவுந்தப்பாடி, சர்க்கரை மார்க்கெட்டில், கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார், காலையில் தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோட்டத்து கிணற்றில், பூனை ஒன்று மேலே வர முடியாமல் கத்திக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்,

உடனே கிணற்றில் இறங்கி, அந்த பூனையை பாத்திரத்தில் போட்டாலும் அது மீண்டும் மீண்டும் திணறி, பயத்தில் வெளியே குதித்து மீண்டும் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. விடாமுயற்சியாக பழனிச்சாமி மீண்டும் நீந்தி, தனது கையாலேயே பூனை எடுத்துக் கொண்டு வெளியே மீட்ட காட்சி தற்போது சமூக வலையதளங்களில் வேகமாக பரவி வருகிறது, பழனிச்சாமியின் இந்த செயலை அக்கம் பக்கத்தினர் மற்றும் சமூக நல, விலங்குகள் நல அலுவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி