இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் இயங்காது

76803பார்த்தது
இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் இயங்காது
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஏப் 19ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதன் எதிரொலியாக , ஏப்19 மற்றும் ஜூன் 4 ஆகிய இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்தி