40 வயது நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை

64409பார்த்தது
40 வயது நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை
தெலுங்கில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான போனி என்கிற படத்தின் மூலம் கிருதி கர்பந்தா ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து டோலிவுட்டில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புருஸ்லீ படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானர். பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பிரபல பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராடை திருமணம் செய்துகொண்டுள்ளார். 40 வயதாகும் புல்கித் சாம்ரா, ஸ்வேதா ரோஹிர் என்பவரை 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி