தொழிற்சாலை கொதிகலன் வெடித்து 40 பேர் படுகாயம்

62பார்த்தது
தொழிற்சாலை கொதிகலன் வெடித்து 40 பேர் படுகாயம்
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியில் இயங்கிவரும் லைஃப் லாண்ட் என்ற தொழிற்சாலையில் நேற்று மாலை கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில் சுமார் 40 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஒரு தொழிலாளி ஆபத்தான நிலமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக காயமடைந்த தொழிளாளர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி