உலக சுற்றுச்சூழல் தினம்

51பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினம்
நந்தா பிசியோதெரபி கல்லூரியின் மாணவர்கள் இயற்கை அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீநந்தா அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 210 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் நட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு ணர்வினை பொதுமக்களிடையே மாணவர்கள் ஏற்படுத்தினர்.
முன்னதாக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் முதல் வர் மருத்துவர் வி. மணிவண்ணன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவ சியம் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு உலக கற்றுச்சூழல் தினத்தை சார்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங் கப்பட்டன.

ஸ்ரீநந்தா அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அலுவ லர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூ ரியின் உதவிப் பேராசிரியர் எஸ். ஜனனி வரவேற்றார். இறுதி ஆண்டு மாணவி பானுபிரியா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி