கல்வி கட்டணம் வழங்கப்பட்டது

62பார்த்தது
கல்வி கட்டணம் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 15 பேருக்கு ரூ. 4. 69 லட்சம் கல்விக் கட்டணத்தை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியது. இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்விக் கட்டணம் தொடா்ந்து வழங்கப்படும் என அந்த நிறுவனம்அறிவித்துள்ளது. சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில்இளங்கலைவேளாண்மை பட்டப்படிப்புபயிலும்பொருளாதாரத்தில்நலிவுற்ற 15 மாற்றுத் திறனாளிமாணவ, மாணவிகளுக்கு நான்கு ஆண்டு படிப்புக்கான கல்விக் கட்டணம் முழுவதும்வழங்கதிட்டமிடப்பட்டது. இதில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்புக்கான கல்விக் கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. முதல்வா் என். வெங்கடேச பழனிசாமி வரவேற்றாா். பதிவாளா் ஆா். தமிழ்வேந்தன் வாழ்த்துரையும், துணைவேந்தா் வி. கீதாலட்சுமி சிறப்புரையும் ஆற்றினா். சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி. சி. துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று முதலாமாண்டு இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் பருவத்துக்கான கல்விக் கட்டணம் ரூ. 4 லட்சத்து 69 ஆயிரத்து 500-க்கான வரைவோலையை வழங்கினா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி