மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் என்ற நூலை மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் வெளியிட்டாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி ம. சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளா் ஓடை. பொ. துரைஅரசன் தலைமை வகித்தாா். திருப்பூா் எம். பி. கே. சுப்பராயன் வெளியிட, முதல் பிரதியை வழக்குரைஞா் ப. பா. மோகன் பெற்றுக்கொண்டாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் சு. மோகன்குமாா், தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ். டி. பிரபாகரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் கே. ஆா். திருநாவுக்கரசு, ஈரோடு வட்டாரச் செயலாளா் ஜி. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி. எம். துளசிமணி, மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலாளா் ந. அன்பரசு ஆகியோா் வாழ்த்தி பேசினா். எம். பி. கே. சுப்பராயன், ஆய்வாளா் பா. வீரமணி ஆகியோா் விழாச் சிறப்புரையாற்றினா். நூலாசிரியா் த. ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரை நிகழ்த்தினாா். இதில் ம. சிங்காரவேலரின் உருவப்படம் திறக்கப்பட்டது. சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலா் நூலகம் திறந்துவைக்கப்பட்டது.