ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8வது கொங்கு ட்ராபி மாநில பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி , கால்பந்து, போட்டிகள் இன்று தொடங்கியது. இப்போட்டி 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கைப்பந்து போட்டியும் கபடி போட்டியும் முதலாவதாக அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை ரிச்மண்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் டாக்டர் சங்கர் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர் சாகுல் அகமத் விளையாட்டு போட்டியை சீரும் சிறப்புபாக நடத்தி வருகிறார்கள்.