ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை அமோகம்

3303பார்த்தது
ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை அமோகம்
ஈரோடு பன்னீர்செல்வம் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் இரவு விடிய விடிய செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை விட இங்கு துணிகள் விலை குறைவாக விற்கப்படுவதால் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் கடந்த வாரம் கடும் பனிப்பொழிவு காரணமாக வியாபாரம் வந்த நிலையில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் நேற்று கூடிய ஜவுளி சந்தையில் வட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக வேலூர் ஆரணி போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதைப்போல் ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் நேற்று ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி