ஈரோடு மாவட்டம் ஆர் என் புதூர், மரப்பாலம் ஆகிய பகுதியில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சமையலறைகள் குழந்தைகள் தங்கி உள்ள அறைகள் கழிப்பறைகள் சுற்றுப்புறத் தூய்மை போன்றவற்றை பார்வையிட்டார்.