பள்ளியில் நடைபெற்ற கலை விழா

55பார்த்தது
வெள்ளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் கலை விழா நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான "உத்பவ்" கலை விழா விற்கு வெள்ளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.

பள்ளியின் தாளாளர் எஸ். டி சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக சியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையிலான உரையினை வழங்கினார்.

பள்ளியின் முதல்வர் திருமதி பிரியதர்ஷினி ஆண்டறிக்கையை வாசிக்க , அடுத்து உத்பவ் கலை விழாவின் முக்கிய நிகழ்வான மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் நடனங்கள், பாடல் இசைப்பது , சிலம்பம் சுழற்றுவது உள்ளிட்ட தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், மாணவ மாணவிகளின் திறமைகளை கையொலி எழுப்பி பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன்,
துணை முதல்வர் மஞ்சுளா உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி