சேலத்தில் இருந்து கோவை நோக்கி 3 பேர் காரில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பெருந்துறை அடுத்து ஓலப்பாளையம் அருகே வந்தபோபோது சென்டர் மீடியன் மீது மோதி எதிர் சாலையில் கோவையிலிருந்து வந்த சரக்கு வேன் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்து மற்ற இரண்டு பேர், சரக்கு வேன் டிரைவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.