சத்தியமங்கலம்: சத்தியில் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
சத்தியமங்கலம் ரோட்டரி சங்கம், ஈரோடு கேன்சர் சென்டர், ஈரோடு வடக்கு ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் சத்தியமங்கலம் கிளை ஆகிய வற்றின் சார்பில் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெற்றது. சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், சத்திய மங்கலம் ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் அமுதா ஆகியோர் கொடிய சைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் சத்தியமங்கலம் வெற்றி நர்சிங் கல்லூரி, காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி, புதுவடவள்ளி நெஸ்ட் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று புற்றுநோய் தடுப்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர் ஊர்வலம் எஸ். ஆர். டி. சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கி ரங்கசமுத்திரம், கடைவீதி வழியாக சத்திய மங்கலம் ரோட்டரி சங்க கட்டிடத்தை சென்றடைந்தது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகளான செயலாளர் தீபலட்சுமி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம், கோபு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.