பவானிசாகர் அருகே கிளை வாய்க்காலுக்குள் கழிவு நீர் கலக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அருகே உள்ள உத்தண்டியூர் ஊராட்சியில் உள்ள எல்பீபி வாய்க்கால் தண்ணீர் செல் லும் கிளை வாய்க்காலுக்குள் கழிவு நீர் கால்வாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியம், உத்தண்டியூர் ஊராட்சி இந்திராநகரில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் உள்ளது. இங்கு விவசாய முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்து நம்பி ஏராளமான கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். விவசாயத்திற்க்கு தேவையான தண்ணீர் பவானிசாகர் எல்பீபி வாய்க்காலின் கிளை வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆக ஸ்ட், மற்றும் டிசம்பர் ஆகிய இரு போகங்கள நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கு கடந்த 70ஆண்டுகளுக்கும் மேலாக கிளைவாய்க்கால் மூலம் தண்ணீர்பாய்கிறது.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை இந்த கிளை வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல கான்கிரீட் அவை போடப்பட்டு உள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது உத்தண்டியூர் ஊராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை கைவிட வேண்டும். இல்லை என்றால் இப்பகுதி விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.