கொஞ்சம் புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

55பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் மழை நீர் செல்லும் வழியின் நடுவே கட்டி வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டிடத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தோட்ட சாலை, தங்க சாலை வீதி, சருமாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர், பகுதியில் உள்ள மழை நீர் செல்லும் வழியில் நடுவே கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டிட கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கட்டிடம் கட்டுவதால் மழைக்காலங்களில் தங்களது வீடுகளுக்குள் மழை நீருடன் கலந்த கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து அடைவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், மேலும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினருக்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் அலட்சியமாக உள்ளதாகவும் உடனடியாக தோட்ட சாலை பகுதி பள்ளத்தில் கட்டி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை அகற்ற கோரி அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் நகராட்சி நகராட்சி பொறியாளர் கவிதாவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி