புளியம்பட்டியில்கழிவு நீருடன் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

73பார்த்தது
பு. புளியம்பட்டியில் கனமழை
கழிவு நீருடன் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதி களில் நேற்று மாலை கனமழை பெய்தது. டானா புதுார், நொச்சிக்குட்டை, தோட்ட சாலை, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது.
தோட்ட சாலை, அம்மன் நகர் வழி யாக செல்லும் மழைநீர் ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பத்து வீடுகள் மற்றும் தோட்ட சாலைகளில் மழை நீர் புகுந்தது. மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் துர்நாற்றம் வீசி, மக்கள் தவித்துப் போயினர்.
அரசு மாணவர் விடுதி, விநாயகர் கோவில், பாண்டியன் கிணறு வீதியில், 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந் ததால் மழை நீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் பரிதவித்தனர்.
மழை நீர் ஓடையில் கழிவு நீர் சுத்தி கரிப்பு மையம் கட்டப்படுவதால், மழை வந்தாலே வீடுகளில் தண்ணீர் புகுந்து, வீட்டு உபயோக பொருட்கள் மழை நீரில்
அரசு மாணவர் விடுதி முன் நிறுத்தப்பட் டிருந்த வாகனத்தை சூழ்ந்த வெள்ள நீர். நனைந்து பழுதாகி விடுவதாக, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி