தாளவாடியில் திமுக ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் பயனாளிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க மறுக்கின்ற மத்திய அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், தாளவாடி பேருந்து நிலையத்தில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சிவண்ணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஒன்றிய துணைச் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாதேவ பிரசாத், மாணவரணி அமைப்பாளர் சிவப்பிரசாத், மாவட்ட பிரதிநிதி சுப்புராஜ், அமுல்ராஜ், மல்லேஸ், பொன்னுசாமி, நசிருல்லாபேக், தாளவாடி திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். மேலும் தாளவாடி வட்டம் ஆசனூர் அருகே அரேப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் H.M. நாகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பொருளாளர் மகாதேவன், கிளை செயலாளர் K. நாகராஜ், விவசாய அணி பொறுப்பாளர் சண்முகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சச்சின், தாளவாடி கிழக்கு ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி