ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த இக்கரை நெகமம் துண்டன சாலை பகுதியில்
சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையின் தருமசாலை திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4. 00 மணிக்கு மகா மந்திரம் பாராயணமும், 4. 30 மணிக்கு மகா ஜோதி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவை, பன்னாரி அம்மன் குழுமங்களின் தலைவர் ஆன்மீகச் செம்மல். டாக்டர். பாலசுப்பிரமணியம் விழாவிற்கு தலைமை தாங்கி தருமசாலை மற்றும் ஞானசபை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அனைத்து சமுதாய பெருமக்களும், அனைத்து தொழில் புரியும் தொழிலாளர்களும் அனைத்து ஊர் பொதுமக்களும் வந்திருந்தனர்.