வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது

2576பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியது. ஈரோடு தாலுக்கா அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில்  இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய ஈரோடு பாராளுமன்றத்தில் 15,38,778 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.

மாவட்டத்தை பொறுத்த வரையில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மொத்த எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.

ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொருத்தவரையில் 1688 வாக்குச்சாவடிகளில் 4056 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2028 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2198 சரி பார்த்து இயந்திரங்களும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது.

.

தொடர்புடைய செய்தி