வீடு வீடாக பணம் விநியோகம் - தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி!

58பார்த்தது
தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கே அரசியல் கட்சிகள் பரப்புரையை முடித்துக் கொண்டன. அதன் பிறகு பரப்புரை செய்யவும், சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு சேகரிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும், திமுக, அதிமுக, பாஜகவினர் வீடு வீடாக ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் வீடியோ எடுத்து பரப்பி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதனை தடுக்காமல் என்ன செய்கிறது என மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

நன்றி வீடியோ: @NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி