அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து, பெண்களுக்கு ‘Pepper Spray’ விநியோகம் செய்தார். அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி ‘Pepper Spray’ மற்றும் SOS உபகரணத்தையும் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு வழங்கினார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த Spray வழங்கப்பட்டதாக கட்சி தரப்பில் கூறப்படுகிறது.