மத்தியப் பிரதேச மாநிலத்தித்தைச் சேர்ந்த சஞ்சய் படிதர் என்பவர் தனது காதலி பிரதிபாவுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். பிரதிபா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், காதலியைக் கொலை செய்த காதலன், அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து, அறையை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார். 9 மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.