அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜுவின் தந்தை, ஆசிரியர் செல்லையா கடந்த வியாழக்கிழமை காலமானார். இந்த நிலையில், இன்று (ஜுலை 28) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடம்பூர் ராஜுவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு கடம்பூர் சிதம்பரபுரத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு மறைந்த ஆசிரியர் செல்லையாவின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.