மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. நேற்று (டிச., 13) திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகளால் ஜொலித்தது.