பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்த மனு பாக்கருக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.