EPFO-ன் கீழ் நீங்கள் ஓய்வூதிய வயதுக்கு முன்னரே ஓய்வூதியம் பெறலாம். பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். முன்கூட்டியே ஓய்வூதியம் பெறும் பட்சத்தில், பணியாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவான வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.