ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்து துறை

73548பார்த்தது
ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்து துறை
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும்.வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தன.

தொடர்புடைய செய்தி