'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்'

72பார்த்தது
'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்'
தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சென்னையில் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். எனக்கு விழும் வாக்கை தாமரைக்கு விழுவது போல் மாற்றி அமைக்க தொழில்நுட்பத்தால் முடியும். பல உலக நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு விட்டது, வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச்சீட்டுதான் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி