அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஜுலை 21) மதியம் 12 மணிக்கு திருச்சி வருகை தருகிறார். அவருக்கு புதுக்கோட்டை ரோடு சுப்பிரமணியபுரம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்திக்க உள்ளார். நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்ற காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.