சென்னை ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வழக்கில் கைதான 4 பேருக்கு பிப்ரவரி 14 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை சோழிங்கநல்லூர் நீதிமன்ற மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவர்கள் 4 பேரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சந்துரு உள்ளிட்ட 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.