கடாயில் காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, உளுந்து, சீரகம், சோம்பு, பச்சரிசி, சிறிது தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கி தனியே வைத்து கொள்ளவும். இன்னொரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கி மேற்குறிப்பிட்ட மசாலாக்களுடன் சேர்த்து, துருதுருவென அரைத்து, கண்ணாடி ஜாரில் சேமித்து வைக்கவும். இதை சூடான சாதத்தில் சிறிது நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையான கறிவேப்பிலை பொடி சாதம் தயார்.