ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம்

82பார்த்தது
ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் சில மணி நேரங்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 4.8 ஆகவும் பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 50--க்கும் மேற்பட்டோர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகி இருந்ததால், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.