தினசரி உணவில் சில ஆரோக்கியமான பானங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் தொப்பையை எளிதாக குறைக்கலாம். அதில் ஒன்று தான் காபி. ஒவ்வொரு நாளும் காபி குடிப்பதால், உடல் கொழுப்பை குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அகற்ற உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடித்தால், தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். குளோரோஜெனிக் அமிலம் எனப்படும் காபியின் ஒரு சிறப்புப் பகுதி இதற்கு உதவுகிறது.