இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக காலில் பந்து தாக்கியதால் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வலியில் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக மெல்போர்னில் டிச., 26ஆம் தேதி நடக்கவிருக்கும் BGT பாக்சிங் டே டெஸ்டின் 4ஆவது போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.